திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தெரணிபாளையம் பெரியார் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூடிப்பகுதியில் மேல்மூடி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் மக்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.