சென்னை அடையாறு பகுதியில் உள்ள வெங்கட் ரத்தினம் நகர் சாலையில் கடந்த சில வாரங்களாக கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயின் மூடியினை சரிசெய்ய வேண்டும்.