கழிவுநீர் கால்வாய்

Update: 2023-04-23 17:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் தாலுகா ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சி எச்சம்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் இல்லை. எனவே கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொன்னுசாமி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்