கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பைபாஸ் ரோட்டில் இருந்து பழைய கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சாக்கடை கால்வாய் அமைக்க சாலையை தோண்டி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. பழைய சாக்கடை கால்வாய்களை தோண்டி பாதியிலேயே விட்டதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.