சென்னை கொருக்குப்பேட்டை ஜவான்மல் சௌகார் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்து, கழிவுநீர் தேங்கி வருகிறது. தேங்கிய கழிவுநீர் அகற்றப்படாமல் அதன் மேலேயே கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.