ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே, அசோக் லேலண்ட்-2 கம்பெனி எதிரில் காந்தி நகரரில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில், காந்தி நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. அதன் அருகே கடந்த ஒரு வாரகாலமாக கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் பரவி ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதையன், ஓசூர்.