தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு பகுதியில் 2-வது தளத்தில் உணவு கழிவுகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தை பெற்ற பெண்கள் இதன் வழியாக கழிவறைக்கு செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த உணவு கழிவுகளை அந்த பகுதியில் கொட்டாமல் வேறு இடத்தில் கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபிநாத், தர்மபுரி.