கோவை கவுண்டம்பாளையம் பிரிவில் இருந்து இடையர்பாளையம் செல்லும் சாலையில் மூவர் நகர், செந்தமிழ் நகர் வளைவில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.