அந்தியூர் தொகுதி திருவள்ளுவர் வீதி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அது முதன்மை வடிகாலுடன் இணைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.