துடியலூரை அடுத்த வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலத்தை ஒட்டிய பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி, குளம் போன்று காட்சியளிக்கிறது. மேலும் சாலையிலும் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மழைநீர் வடிகாலை தூர்வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.