திருச்சி தென்னூர் உழவர் சந்தை மற்றும் அண்ணா நகர் செல்லும் வழியின் இடது பக்கம் உள்ள கழிவுநீர் வாய்க்கால் குப்பைகள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.