வடலூர் பஸ்நிலையம் அருகே வடலூர்-சென்னை சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரிசெய்வதோடு, அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.