விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 17-வது வார்டு சஞ்சீவிநாதபுரத்தில் உள்ள கழிவுநீர் வாருகால் முறையாக பராமரிக்காமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.