நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-21 05:15 GMT

அந்தியூரை அடுத்த பிரம்மதேசம் பெத்தாரண்ணன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் செல்கிறது. சாலை விரிவாக்க பணிக்காக கடந்த ஆண்டு இந்த சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டது. சாலை பணி முடிந்தும், இடிக்கப்பட்ட சாக்கடை கால்வாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீா் தேங்கி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்