தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-12-18 13:26 GMT


கோவை மாநகராட்சி 76-வது வார்டு திரு.வி.க. நகரில் அம்மன் கோவில் பின்புறம் பகுதியில் 3 கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்