ஊருணியில் கழிவுநீர்

Update: 2022-07-18 11:23 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலின் தெப்பக்குளம் உள்ளது. இந்த ஊருணியின் நீரை இப்பகுதி பொதுமக்கள் பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஊருணியில் சிலரால் கழிவுநீரானது கலக்கப்படுகிறது. இதனால் இந்த ஊருணியானது மாசடைந்து துர்நாற்றம் வீசி அசுத்தமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஊருணியின் கரையில் ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஊருணியில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாறன், இளையான்குடி.

மேலும் செய்திகள்