டி.என்.பாளையம் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அருகே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பஸ் ஏற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பஸ் நிறுத்தம் அருகில் சாய்ந்து விழும் நிலையில் மரம் ஒன்றும் உள்ளது. எனவே பஸ் நிறுத்தம் அருகில் மழை நீர் தேங்காமலும், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.