ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி ரோட்டில் திருமண மண்டபத்துக்கு பின்னால் உள்ள வீதியில் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் தேங்கி வருவதால் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அந்த வீதியில் வடிகால் வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.