சென்னை சிட்லபாக்கம் பெரியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தேங்கிய நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓட வாய்ப்புள்ளது. சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்லும் போது மூக்கைப் பொத்திக் கொண்டு தான் செல்லவேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து கால்வாயை சரிசெய்ய வேண்டுகிறோம்.