கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வேப்பனப்பள்ளியில் இருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.
-சின்னசாமி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.