சென்னை பெரம்பூர் அகரம் எஸ்.ஆர்.பி கோவில் தெற்கு தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 3 மாதங்களாக மந்தமான நிலையில் நடந்து வருகிறது. சாலையில் பணி நடந்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி துரித நடவடிக்கை மேற்கொண்டு வடிகால் பணிகளை விரைந்து முடித்தால் சாலைவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.