சென்னை பழைய வண்ணாரபேட்டை மூலக்கொத்தளம் பஸ்நிலையம் எதிரே மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் நுழைவு வாயில் அருகே சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியவாறு இருக்கிறது. தற்போது வரை அகற்றப்படவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் மூக்கை பொத்திக்கொண்டு தான் தினமும் இதை கடந்து செல்கின்றனர். குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.