சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தாலுகா அமாணி கொண்டலாம்பட்டி ஊராட்சி பி.நாட்டாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்தநிலையில் அந்த கழிவறை தண்ணீர் வசதி இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக பயன்படாமல் காணப்படுகிறது. மேலும் அங்கு செடி, கொடிகள் வளர்ந்து உள்ளதால் விஷப் பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே செடி, கொடிகளை அகற்றி புதுப்பித்து கழிவறையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?