மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்துக்குள் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்கள் மூக்கைபிடித்தபடி சென்று வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுறை பழைய பஸ் நிலையத்துக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?