கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் முற்றிலும் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், கொசுத்தொல்லையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, கால்வாயை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.