திருப்பூர்- பல்லடம் ரோடு திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்கம் அருகில் கழிவு நீர் கால்வாய் முழுவதும் சேதம் அடைந்து விட்டது. மேலும் வாய்க்காலில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் போகாமல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மழை நீர் வடிய வழி இல்லாமல் ரோட்டிலே தேங்கும் நிலையில் உள்ளது. எனவே சாக்கடை வாய்க்காலை தூர்வார வேண்டும்.