விருத்தாசலம் தாலுகா மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் உள்ள அலியார் நகரில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணியும் மேற்கொள்ள வேண்டும்.