தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-14 05:09 GMT
கடலூர் துறைமுகம் சீமான் தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகில் கால்வாய் தூர்ந்து போய் கிடப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பள்ளிகளில் மாணவர்கள் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே தூர்ந்து போன கால்வாய்களை சீரமைத்து, கழிவுநீர் தடையின்றி வழிந்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்