தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-17 12:11 GMT

பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் பேருராட்சி உட்பட்ட சி.வி.ஆர் நகர் பகுதியில் சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. அங்கு கழிவுநீர் வடிகால் இல்லாததால் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலவுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவு நீர் கால்வாய் அமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சுஜித், ஆனைமலை.

மேலும் செய்திகள்