நாகை மாவட்டம் நாகூர் கடற்கரை முடுக்கு தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆழ்நுழைவு தொட்டியின் வழியாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் வாகனங்கள் செல்லும் போது பொதுமக்கள் மீது கழிவுநீர் படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?