பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிகளுக்கு சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது தபால் நிலையம் அருகில் பணிகள் நடைபெறுவதால், கோர்ட்டு, தீயணைப்பு நிலையம் அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.