விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர்குளம் பஞ்சாயத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிநிற்கும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.