சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-14 15:09 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் உள்ள ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி பிரிவு ரோட்டில் சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாய் பல நாட்களாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்று காணப்படும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் கால்வாயில் தேங்காமல் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்