சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-07-12 18:42 GMT

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு லாங்லி ரோடு பால் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மேற்கு பகுதி சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் அருகில் உள்ள தெருக்களில் வழிந்தோடி சுகாதார கேட்டினை ஏற்படுத்துகிறது. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்