தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-08 15:49 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பின்றி முற்றிலும் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் தற்போது அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே கழிவுநீர் கால்வாயே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்