மதுரை மாவட்டம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 25-வார்டு மீனாம்பாள்புரத்தில் வ.உ.சி. 1-வது தெருவில் பாதாள சாக்கடை மூடியானது உடைந்து கழிவுநீரானது அதிலிருந்து வெளியேறுகிறது. இதனால் இப்பகுதியின் சுகாதாரம் சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் அதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.