சேலம் தாரமங்கலம் 27-வது வார்டு கட்டைய முத்து முதலி தெருவில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து தெருவில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அந்த பகுதியில் மக்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், தாரமங்கலம், சேலம்.