ராமநாதபுரம் நகராட்சி 1- வது வார்டில் பாதாள சாக்கடை மூடியிலிருந்து நாள்தோறும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் நடந்து செல்வோர் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு,தொற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே இதை நிரந்தரமாக சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.