
திட்டக்குடி தாலுகா கொரக்கவாடி கிராமம் எம்.ஜி.ஆர்.நகரில் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வீடுகளில் புகுந்து வருவதாலும், தெருக்களில் தேங்கி நிற்பதாலும் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே வடிகால் வசதி அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.