மதுரை மாவட்டம் பேரையூரில் வத்திராயிருப்பு சாலை அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு கொசுக்கடியால் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?