பழனி நகராட்சி 33வது வார்டு பகுதியான வெண்மணி நகர், தில்லையடி வள்ளியம்மை தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே கழிவுநீர் தேங்குவதும், மழைக்காலத்தில் மழைநீர் குளம்போல் தேங்குவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் கழிவுநீரால்அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்துதர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.