திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சாத்தாரவீதி, கீழ அடைஞ்சான் தெரு சந்திப்பு பகுதி பூக்கடை , காய்கறி தரைக்கடை உள்ள பகுதியில் மாநகராட்சி பணிக்காக சாக்கடை மேல் மூடப்பட்டிருந்த சிமெண்ட் மூடிகளை அகற்றினர். இந்தநிலையில் பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சாக்கடையை மூடவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.