மங்களூர் ஒன்றியம் எழுத்தூர் ஊராட்சி 2-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் பராமரிப்பின்றி முற்றிலும் தூர்ந்து போய் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி நிற்கிறது. இதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே தூர்ந்து போன கால்வாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.