செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் லட்சுமிபுரம் பகுதியிலுள்ள பாண்டியன் தெரு அருகே மழைநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. மேலும் திறந்த நிலையில் இருக்கும் கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்டுவதால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே இந்தநிலை தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.