காஞ்சிபுரம் பெருங்குடி ஓ.எம்.ஆர் 200 அடி சாலை அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி பின்புறம் இருக்கும் ஏரியில் உள்ள நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி போயுள்ளது. ஏரி அருகே உள்ள சில நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, இந்தபோக்கை தடுத்தி நிறுத்தி நீர்நிலையை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.