கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-27 13:11 GMT

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பெரியார் நகர், ஜீவா வீதி, நேதாஜி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மழை பெய்யும்போது, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அங்கு குடியிருக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே கால்வாய்களை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்