சுகாதார சீர்கேடு

Update: 2022-08-26 17:30 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி பின்புறம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள புதருக்குள் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்