திட்டக்குடி நகராட்சி பெரியசாமி திரையரங்கம் பின்புறம் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் ஒருநாள் மழைக்கு தாக்கு பிடிக்காமல் நேற்று முன்தினம் பெய்த மழையின் போது இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதேபோல் மேலும் பல வா்டுகளில் கால்வாய் இடிந்து விழுந்தது. இதை சீரமைப்பதுடன் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்