அரக்கோணத்தை அடுத்த சித்தேரி பகுதியில் ஒரு சிமெண்டு தொழிற்சாலை உள்ளது. அந்தத் தொழிற்சாலைக்குச் செல்லும் சாலையில் கும்பினிப்பேட்டை பகுதியில் அரக்கோணம்-சோளிங்கர் ரோடு சந்திப்பு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், கார் மற்றும் தொழிற்சாலைக்குச் செல்லும் கனரக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சம்பத்குமார், அரக்கோணம்.