கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூரில் இருந்து மேல்வல்லம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக பள்ளி பஸ் சென்று வருகிறது. கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்யுமா?
-முனியாண்டி, காட்டுக்காநல்லூர்.